நான் பலதடவை சொல்லியிருக்கிறன் கோபத்தில நீ போயிடு என்னால பிள்ளையளை பார்க்க ஏலுமெண்டு ஆனால் அது வீம்புக்கு கதைக்கிறது, அதுபோல நீ தேவை இல்லை என்னால முழுதாக பார்க்க முடியும் பிள்ளையளை எண்டு சொல்லுறது எவ்வளவு பெரிய சவாலானது என்பது இண்டைக்கு புரியாது. சிங்கிள் மம் எண்டு இன்னும் 15 வருஷம் காசுக்கு பிரச்சனை வராது ஆனால் மற்ற எல்லாம் சாதகமாக இருக்குமா ? என்ன 30 வயதிலயா இருக்கிறம்? குளிர் ஒருபுறம் , ஆஸ்துமா ,மூட்டு வலி , காலில ஆணி இதுகளை ஓரளவு சமாளிக்க கார் எடுக்க வேணும் அதுக்கு இன்னும் ஒரு வருஷமாவது வேணும் இதெல்லாம் சமாளித்தலும் வீதியில என்ன எங்கட கார் மட்டுமா ஓடும்? 20 வருசம் நான் கார் ஓட தொடங்கி இருந்தாலும் எனக்கு இன்னும் பயம் பிள்ளையளோட போகும்போது. இது உனக்கே தெரியும் .
உறவுகள் / நட்புகள் எத்தனை நாட்கள் உதவி செய்யும்? நீயே தேவையில்லாமல் கடமைப்பட விரும்பினதில்லை,
மகளை டான்ஸ் கிளாசுக்கு அனுப்பவேணும், சைல்ட் Model அக்கவேணும் டாக்டர் ஆக்கவேணும் இன்னும்....பல சொல்லாத கனவுகள் உன்னுள்ளும் என்னுள்ளும்.
Tamil Interpreter from Miltonkeens :- எங்கட தமிழ் சமூகம் இப்பிடி சீரழிந்து போறத பார்க்க தனக்கு பெரும் கவலையாம், சிலபேருக்கு தான் advice செய்து விட்டுக்கொடுத்து போன குடும்பமும் இருக்குதாம் சிலர் விட்டு குடுக்காமல் பிள்ளையளின் நலனில் அக்கறை இல்லாமல் அழிந்துபோனதை தான் பார்த்து கவலை படத்தான் முடிந்ததாம். இரண்டு பெரும் ஏலுமானவரை கதைச்சு பிள்ளையளுக்காக சமாதானமாக போகப்பருங்கோ பிள்ளைகளின் நலனில் அக்கறை எடுங்கோ, மூன்று பெரும் சின்ன பிள்ளைகள் என்று எனக்கு பல அறிவுரை, அவர் யாரோ ஒரு தமிழன் அவருக்கு இருக்கிற அக்கறை எங்களுக்கு இல்லாமல் போனதா?
நீ லண்டன் வந்த பிறகு பக்கத்து வீட்டு காரி எத்தனை தரம் என்னை இழுத்தவள் ஆனால் என்னாலை அப்படி தப்பு பண்ண முடியவே இல்லை என்ன காரணம்??? இப்பிடி எண்ணத்தோட இருந்த எனக்கு சிலதை பார்த்து எவ்வளவு வேதனைப் பட்டிருப்பன் கொஞ்சம் என்ர மனநிலையில் இருந்து பார் ஆனால் அது என்னுடைய தப்புதான் .தயவு செய்து புரிந்து கொள் .
அதை திரும்ப இனிமேல் பார்க்க வேண்டாம்
நான் எவ்வளவு தூரம் இறங்கி போகவும் தயார் உன்னிடம் million time மன்னிப்பு கேட்கவும் நான் தயார் இன்னும் உனக்கு என்ன வேணும் அதை நிறைவேற்றவும் நான் தயாராக இருக்கிறன், இறங்கி போகிற எண்ணம் உன்னிடம் கொஞ்சம் இருக்கிறதா?? அன்பு ,பாசம் ,பிள்ளைகளின் எதிர்காலம், மனச்சாட்சி எல்லாம் உன்னிடம் இருக்கெண்டு எனக்கு தெரியும் இருந்தும் உன்னால எப்படி சொல்ல முடிந்தது பிள்ளையளுக்கு என்னால ஆபத்து என்று??
தயவு செய்து சிந்தித்து செய் அதிகம் கோபப்படுறது யாருக்கும் நல்லதில்லை தயவு செய்து பிள்ளைகலின் நலனில் அக்கறை எடுப்பம், என்னை குழப்பி உன்னையும் துன்பப்பட வைத்தது Facebook அது உனக்கு நன்றாக தெரியும் .தயவு செய்து புரிந்துகொள். நான் உன்மேல பொய்யான குற்றம் சுமத்திறதோ , நீ என் மேலே பொய்யான குற்றம் சுமத்துறதோ உனக்கும் நல்லதில்லை ,எனக்கும் நல்லதில்லை ,பிள்ளையளுக்கும் நல்லதில்லை .
நான் உன்னிலையும் ,பிள்ளையளிலையும் அதிகம் அக்கறை வைத்திருக்கிறது உனக்கு நன்றாக தெரியும். நடந்த சம்பவங்களுக்கு காரணமும் தெரியும். இப்பவாவது உன்னை இறுக பிடித்திருக்கிற கோபம் ,ஈகோவை ஒரு புறம் இறக்கி வைத்து விட்டு சிந்தித்துப்பார். நாங்கள் நினைத்ததெல்லாம் வாழ்வில் நடந்ததா? எதிர்காலம் எப்படி இருக்கும் ??கொஞ்சம் அமைதியாக இருந்து நிதானமாக யோசி.
என்னுடைய மனதில இப்ப உன்னையும்,பிள்ளையளையும் தவிர வேறை எந்த குழப்பமும் இல்லை நான் நல்ல தெளிவாக இருக்கிறன் ,இனிமேல் வாழ்வில் Facebook இல்லை . நீ solicitor கு சொன்னமாதிரி நான் violent man இல்லை doctor பார்க்க தேவையும் இல்லை நான் நல்ல தெளிவாகத்தான் இருக்கிறன். தயவு செய்து மனதில் நிறுத்து, கோபம் பழிவாங்கிற எண்ணம் இன்று சரியாக தெரியலாம் அது நிச்சயமாக அழிவையே தேடித்தரும் அதை நீ செய்ய நினையாதே .
இறுதியாக -அன்டன் சுதாவுக்கும் , ரிஸ்மிக்கும் , தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கும் இருக்கிற அக்கறை கூட எங்களுக்கு எங்கள் பிள்ளையள் மீதும் ,எங்கள் மீதும் இல்லாமல் போகும் என்று நான் நினைக்கவில்லை .உங்கள் குடும்பத்தில் இருக்கும் சிலர் வாழ்க்கை சொர்க்கமாக மட்டுமே இருக்கவேணும் என்று எண்ணுகின்றனர் ,ஆனால் உனக்கு நன்றாக தெரியும் நாம் எவ்வளவு கடினமான பாதைகளை கடந்து வந்தோம் என்று .
நான் உன்னுடன் பேசமுடியாது ஆனால் உன்னால் முடியும். நாங்கள் போகிற பாதை சரியானதா என்று இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட நாம், ஒரு இரண்டு மணிநேரம் மட்டும் பேசிப்பார்ப்போம், ஏனெனில் இதில உன்னுடைய, என்னுடைய வாழ்க்கை மட்டும் இல்லை முக்கியமாக பிள்ளைகளின் வாழ்க்கை அடங்கி இருக்கு. உன்னை நானும் ,என்னை நீயும் நோகடிக்கிறதில எந்த நியாயமும் இல்லை மேலும் வேதனை தான் மிஞ்சும்.. நீ பொய் சொல்லி என்ரை பெயரை black list க்கு அனுப்பிறது / jail அனுப்பிறது உனக்கு சந்தோசம் தருமா ? தயவு செய்து கொஞ்சம் யோசி.
உனது கோபம் நியாயமானது ஆனால் உங்களுக்காகவே வாழ்ந்த என்னைப்பற்றி கொஞ்சம் யோசித்துப்பார் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இவைகளை செய்தம் கொஞ்சம் என்னோட கதை, எனக்கு கோபம் வரும் சத்தம் போடுவன் ஆனால் நீ சொல்லுறதுமாதிரி நான் கொலைகாரன் இல்லை. நான் உங்களில் வைத்திருக்கும் அன்பு, பாசத்தில் உன்னிடம் ஒரு சிறு அளவு இப்பவும் இருக்கும் எண்டால் எல்லாத்தையும் சொர்க்கமாக மாத்த முடியும்.
கடவுள் எங்களுக்கு ஒருமாதம் இறுதி சந்தர்ப்பம் தந்திருக்கிறார் எண்டதை ஒருபோதும் மறவாதே அதுதான் சத்தியம் .
நானும் பொய் சொல்லி நீயும் பொய்ச்சொல்லி சீரழிய வேண்டாம்.எத்தனை சொல்வதெல்லாம் உண்மையை பார்த்தோம் விமர்சனம் செய்தம் இன்று நாம் அதே இடத்தில் , தயவு செய்து வேண்டாம் இந்த கேவலம் .
நாங்கள் ஒருவரில் ஒருவர் கோபம் ,வெறுப்பு,பழிகூறலை பிரயோகிக்க வேண்டாம் அன்பு செலுத்துவது எப்படி ஒரு மனநிலையோ அன்பைப் பெறுவதும் ஒரு மனநிலை தான். ஆனால் துயரம் என்னவெனில் தருபவர்கள் தருகையில் பெறுபவர்கள் வாங்கிக் கொள்வதில்லை . பெறுபவர்கள் தயாராய் இருக்கும் போது தருபவர்கள் முன்வருவதில்லை. துயரம் இனியும் வேண்டாம் .
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
நான் உங்களை பிரிந்து அழுத்த அழுகை பட்ட துன்பம் அதை சொல்லவே முடியாது இண்டைக்கும் நான் சாப்பிடுறது பாண் தெரியுமா? தயவு செய்து மேலும் என்னை கொல்லாதேட.என்னில் நீ உண்மையான பாசம் கொஞ்சமாவது வைத்திருந்தது உண்மை எண்டால் டெய்லி ஒரு 2 மினிட்ஸ் அன்பாக கதையடா .சண்டை போடத்தான் கூடாது அன்பாக பேசவோ ,சந்தோசமாக இருக்கவோ எந்த கோர்ட்டும் தடைவிதிக்காது .
தயவு செய்து கோபம் பழிவாங்கிற எண்ணம் வேண்டாம் ,தயவு செய்து call பண்ணு நான் உனக்கு கோல் செய்யமுடியாது , பேசக்கூடாது என்பதன் கருத்து - சண்டை, வாக்குவாதம் வரக்கூடாது என்பதே.
குறள் 72:.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
Tamil meaning
Tamil meaning
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
Translation:.
The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.
Commentary:.
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.
https://www.youtube.com/watch?v=vofP7KFwlec&t=72s
No comments:
Post a Comment