Thirukural-திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவின் வாயிலாக படித்து பயன்பெறுங்கள்.
மேலும் உங்களது கருத்துக்களையும், எதாவது திருத்தங்கள் இருப்பின் அதற்கான  வேண்டுதல்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கிறோம்.

-நன்றி-
ஜெ.சிவா 

You are welcome to Thirukural-world blogspot !

Thirukural-world blogspot was completely designed and developed by me and my partner. It was first launched on 01/12/2014 - since then, We have been constantly trying to make this site as interesting, entertaining and useful informative as possible; and hope I have attained our goals to a certain level. 

If you come across any interesting site or informative stuff and if you feel it might be useful to others, please join in this site. Feel free to add your comments and suggestions too, which will help me to make this site even better. 

Hope, you will have a wonderful time here!

-Thank you-

Jeya-Siva


















குறள் 1321-1330 ஊடலுவகை

குறள் 1321:.
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் 
வல்லது அவர்அளிக்கு மாறு.

Tamil meaning
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது. 

Translation:.
Commentary:.
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.

குறள் 1322:.
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி 
வாடினும் பாடு பெறும்.

Tamil meaning
காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும். 

Translation:.
Commentary:.
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike. 

குறள் 1323:.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு 
நீரியைந் தன்னார் அகத்து.

Tamil meaning
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா? 

Translation:.
Commentary:.
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water? 

குறள் 1324:.
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் 
உள்ளம் உடைக்கும் படை.

Tamil meaning
இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

Translation:.
Commentary:.
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart. 

குறள் 1325:.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் 
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Tamil meaning
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது. 

Translation:.
Commentary:.
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love. 

குறள் 1326:.
உணலினும் உண்டது அறல்இனிது காமம் 
புணர்தலின் ஊடல் இனிது.

Tamil meaning
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

Translation:.
Commentary:.
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse. 

குறள் 1327:.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் 
கூடலிற் காணப் படும்.

Tamil meaning
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும். 

Translation:.
Commentary:.
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows). 

குறள் 1328:.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் 
கூடலில் தோன்றிய உப்பு.

Tamil meaning
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா? 

Translation:.
Commentary:.
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire? 

குறள் 1329:.
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப 
நீடுக மன்னோ இரா.

Tamil meaning
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக. 

Translation:.
Commentary:.
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her! 

குறள் 1330:.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் 
கூடி முயங்கப் பெறின்.

Tamil meaning
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

Translation:.
Commentary:.
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike. 

குறள் 1311-1320 புலவி நுணுக்கம்

குறள் 1311:.
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 
நண்ணேன் பரத்தநின் மார்பு.

Tamil meaning
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்.

English meaning
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you. 

குறள் 1312:.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

Tamil meaning
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை நீடுவாழ்க என வாழ்த்துவேன் என்று நினைத்து. 

English meaning
When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life. 

குறள் 1313:.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 
காட்டிய சூடினீர் என்று.

Tamil meaning
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள். 

English meaning
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman. 

குறள் 1314:.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் 
யாரினும் யாரினும் என்று.

Tamil meaning
யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள். 

English meaning
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky. 

குறள் 1315:.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 
கண்நிறை நீர்கொண் டனள்.

Tamil meaning
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

English meaning
When I said I would never part from her in this life her eyes were filled with tears. 

குறள் 1316:.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக் கனள்.

Tamil meaning
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு  ஏன் மறந்தீர்?  என்று அவள் ஊடல் கொண்டாள். 

English meaning
When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike. 

குறள் 1317:.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் 
யாருள்ளித் தும்மினீர் என்று.

Tamil meaning
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ யார் உம்மை நினைத்ததால் தும்மினீர் என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள். 

English meaning
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?" 

குறள் 1318:.
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் 
எம்மை மறைத்திரோ என்று.

Tamil meaning
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் "ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

English meaning
When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".

குறள் 1319:.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் 
இந்நீரர் ஆகுதிர் என்று.

Tamil meaning
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள், ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ? என்று சினந்தெழுவாள்.

English meaning
Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)." 

குறள் 1320:.
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 
யாருள்ளி நோக்கினீர் என்று.

Tamil meaning
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள். 

English meaning
Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?" 

குறள் 1301-1310 புலவி

குறள் 1301:.
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் 
அல்லல்நோய் காண்கம் சிறிது.

Tamil meaning
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.

English meaning
 Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not. 

குறள் 1302:.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்.

Tamil meaning
ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும். 

English meaning
A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much. 

குறள் 1303:.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் 
புலந்தாரைப் புல்லா விடல்.

Tamil meaning
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும்.

English meaning
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony. 

குறள் 1304:.
ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.

Tamil meaning
ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்.

English meaning
Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root. 

குறள் 1305:.
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை 
பூஅன்ன கண்ணார் அகத்து.

Tamil meaning
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும். 

English meaning
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands. 

குறள் 1306:.
துனியும் புலவியும் இல்லாயின் காமம் 
கனியும் கருக்காயும் அற்று.

Tamil meaning
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும். 

English meaning
Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit. 

குறள் 1307:.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 
நீடுவ தன்றுகொல் என்று.

Tamil meaning
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு. 

English meaning
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.

குறள் 1308:.
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் 
காதலர் இல்லா வழி.

Tamil meaning
நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

English meaning
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow? 

குறள் 1309:.
நீரும் நிழலது இனிதே புலவியும் 
வீழுநர் கண்ணே இனிது.

Tamil meaning
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.

English meaning
Like water in the shade, dislike is delicious only in those who love. 

குறள் 1310:.
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் 
கூடுவேம் என்பது அவா.

Tamil meaning
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.

English meaning
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.